9 மே, 2009

அறிவியல் வி(ஷ/ட)சயங்கள் அனிமேஷன் வடிவத்தில்அறிவியலை மிகவும் இரசிப்பவரா நீங்கள்? டாப்ளர் விளைவு போன்றவற்றிற்கு விளக்கம் தேடிக்கொண்டிருப்பவரா? பள்ளிக்கூடத்தில் வாத்தியார் மாங்கு மாங்கு என்று பாடம் நடத்தினாலும் புரியாமல் தவித்தவரா? வெறும் புத்தகத்தில் மட்டும் படித்தால் எப்படி 'எதையும் பிராக்டிக்கலா பண்ணினாத்தான் புரியும்(!)' என்று சொல்லி எஸ்கேப் ஆகுபவரா? (ஏதோ குருவி லேகியம் விக்கிறவன் மாதிரி - இப்படியெல்லாம் ஒவரா பில்டப் குடுக்காதடா!)

வாங்க வாங்க... உங்களுக்காகவே சில அறிவியல் விசயங்கள் ('ட', 'ஷ' - சவாக மாறியது - தாமிரா (மன்னிக்கவும்) ஆதிமூலகிருஷ்ணனோட மிக்ஸ்டு ஊறுகாயின் பாதிப்பு! :) )

டாப்ளர் எஃபெக்ட், அணுக்கரு இணைவு, பெருவெடிப்பு - வார்த்தைகள், பாடப்புத்தகத்தில் படிக்கும் காலத்தில் 'பேசித்தீராத ஒன்றாக' (!!!இது சும்மா - கொசுறு)இருந்திருக்கின்றன!

'டாப்ளர் எஃபக்ட்' - பார்வையாளர் ஒருவர் நிலையான ஒலிமூலத்தை நோக்கி நகரும்போது ஒலியின் அதிர்வெண் கூடுவது போன்றும், விலகிச்செல்லும் போது குறைவது போன்றும் தோன்றுவது டாப்ளர் விளைவு எனப்படும். ஒலிமூலமானது பார்வையாளரை நோக்கி வரும்போது அதிர்வெண் உயர்ந்தும், பார்வையாளரை விட்டு விலகிச் செல்லும்போது அதிர்வெண் குறைந்தும் காணப்படும்.

இப்படித்தாங்க நான் படிச்சேன்.

அது எப்படிடா கூடும்? ஆனா கூடாது! குறையும் ஆனா குறையாது?! (வரும் ஆனா வராது) உண்மையிலே என்னதான் நடக்குது?

இப்படி நானும் மண்டையை உடைத்துக்கொண்டேன். எழுத்துக்களில் படித்தது, படமாகப் பார்க்கும்போது சுலபத்தில் புரிந்துகொள்ளமுடிகிறது.

டாப்ளர் விளைவு:

கீழே உள்ள படம் - ஒரு அனிமேஷனில் இருந்து எடுக்கப்பட்டது. பச்சை புள்ளியை ஒலிமூலமாக கற்பனை செய்துகொண்டு அதை 'சுட்டெலி' (அதாங்க 'மவுஸ்') மூலமாக அழுத்திப்பிடித்துக்கொண்டு நகர்த்துங்கள். இப்போது விண்டோவின் கரையோரமாக மோதும் அலைகளைக் கவனித்துப் பாருங்கள், புரிந்துவிடும். அதிர்வெண் கூடுவதும் குறைவதும். அல்லது 'சோர்ஸ் மோஷன்' என்பதைத் தேர்வு செய்தும் இதைச் செய்யலாம்.நீங்களே செய்து பார்க்க இங்கே கிளிக்குங்கள்.

மேலும் அதிகப்படியான சில செய்முறை அனிமேஷன்கள் கீழே உள்ள பக்கத்தில்.
0 மறுமொழிகள்

Comments

0 comments to "அறிவியல் வி(ஷ/ட)சயங்கள் அனிமேஷன் வடிவத்தில்"

கருத்துரையிடுக

 

(C)ஊர்சுற்றி Content Rights reserved. Do not republish without the Author's permission.
Theme Revolution Two Church theme Source Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com Gorgeous Beaches of Goa