அறிவியல் புத்தகங்களில், 'கலைக்கதிர்' என்ற புத்தகம் நான் தொடர்ந்து படித்து வருவது. கல்லூரியில் அறிமுகமாகி, என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. விண்வெளி பற்றி இதில் வெளியான பல கட்டுரைகள் என்னை 'இயற்பியல்' ரசிகனாக்கிவிட்டன.
மருத்துவக் கண்டுபிடிப்புகள்
விண்வெளி
நோபல் பரிசு
வேதியியல்
விலங்குகள்
மனித உடல்
என்று பலவிதமான தலைப்புகளில் கட்டுரைகள் இன்றும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. பள்ளியில் பயில்பவர்களுக்கு பரிசளிக்க மிகவும் சரியான அறிவியல் புத்தகம் இது.
கலைக்கதிர் 2004:
கடந்த ஆண்டிலிருந்து சற்றே பெரிய அளவில் 10 ரூபாய் விலையில் வெளிவந்துகொண்டிருக்கிறது.
வருடச் சந்தா 120ரூபாய் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி புத்தகத்தை வீட்டிற்கு வரவழைக்கலாம்.
தொகையை காசாணை (Money Order) அல்லது வரைவாணை (DD) மூலமோ ''ஆசிரியர், கலைக்கதிர், கலைக்கதிர் கட்டிடம், 963 அவினாசி சாலை, கோவை - 37'' என்ற முகவரிக்கு அனுப்புக. காசாணையின் அடிக்கட்டையில் புதிய சந்தா என்றோ புதுப்பிக்கும் சந்தா(சந்தா எண்) என்றோ, குறித்து இதழ் அனுப்ப வேண்டிய முகவரி (பின்கோடு எண் மற்றும் மாவட்டம் உட்பட) அனுப்பியுள்ள தொகை மற்றும் எந்த மாதம் முதல் இதழ் வேண்டும், என்ற விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.








Comments
1 comments to "நீங்கள் கலைக்கதிர் படிக்கிறீர்களா?"
18 ஜனவரி, 2010 1:42 am
நான் தீவிர கலை கதிர் ரசிகன். எனது பத்து வயதிலிருந்து படிக்கின்றேன். தற்போது ஒரு மருத்துவ மாணவன். இலங்கை. முழு இணையத்தையும் அலசிவிட்டேன் ஆனால் அவர்களின் Homepage ஐ கண்டு பிடிக்க முடியவில்லை. தெரிந்தால் அறியத்தரவும்(afranshome@yahoo.com). இலங்கையில் வாங்குவது குதிரை கொம்பு. முடிந்தால் ஸ்கான் செய்து 4sharedd.com இல் upload பண்ணுங்கள்.
நன்றி
கருத்துரையிடுக