9 மே, 2009

அறிவியல் வி(ஷ/ட)சயங்கள் அனிமேஷன் வடிவத்தில்அறிவியலை மிகவும் இரசிப்பவரா நீங்கள்? டாப்ளர் விளைவு போன்றவற்றிற்கு விளக்கம் தேடிக்கொண்டிருப்பவரா? பள்ளிக்கூடத்தில் வாத்தியார் மாங்கு மாங்கு என்று பாடம் நடத்தினாலும் புரியாமல் தவித்தவரா? வெறும் புத்தகத்தில் மட்டும் படித்தால் எப்படி 'எதையும் பிராக்டிக்கலா பண்ணினாத்தான் புரியும்(!)' என்று சொல்லி எஸ்கேப் ஆகுபவரா? (ஏதோ குருவி லேகியம் விக்கிறவன் மாதிரி - இப்படியெல்லாம் ஒவரா பில்டப் குடுக்காதடா!)

வாங்க வாங்க... உங்களுக்காகவே சில அறிவியல் விசயங்கள் ('ட', 'ஷ' - சவாக மாறியது - தாமிரா (மன்னிக்கவும்) ஆதிமூலகிருஷ்ணனோட மிக்ஸ்டு ஊறுகாயின் பாதிப்பு! :) )

டாப்ளர் எஃபெக்ட், அணுக்கரு இணைவு, பெருவெடிப்பு - வார்த்தைகள், பாடப்புத்தகத்தில் படிக்கும் காலத்தில் 'பேசித்தீராத ஒன்றாக' (!!!இது சும்மா - கொசுறு)இருந்திருக்கின்றன!

'டாப்ளர் எஃபக்ட்' - பார்வையாளர் ஒருவர் நிலையான ஒலிமூலத்தை நோக்கி நகரும்போது ஒலியின் அதிர்வெண் கூடுவது போன்றும், விலகிச்செல்லும் போது குறைவது போன்றும் தோன்றுவது டாப்ளர் விளைவு எனப்படும். ஒலிமூலமானது பார்வையாளரை நோக்கி வரும்போது அதிர்வெண் உயர்ந்தும், பார்வையாளரை விட்டு விலகிச் செல்லும்போது அதிர்வெண் குறைந்தும் காணப்படும்.

இப்படித்தாங்க நான் படிச்சேன்.

அது எப்படிடா கூடும்? ஆனா கூடாது! குறையும் ஆனா குறையாது?! (வரும் ஆனா வராது) உண்மையிலே என்னதான் நடக்குது?

இப்படி நானும் மண்டையை உடைத்துக்கொண்டேன். எழுத்துக்களில் படித்தது, படமாகப் பார்க்கும்போது சுலபத்தில் புரிந்துகொள்ளமுடிகிறது.

டாப்ளர் விளைவு:

கீழே உள்ள படம் - ஒரு அனிமேஷனில் இருந்து எடுக்கப்பட்டது. பச்சை புள்ளியை ஒலிமூலமாக கற்பனை செய்துகொண்டு அதை 'சுட்டெலி' (அதாங்க 'மவுஸ்') மூலமாக அழுத்திப்பிடித்துக்கொண்டு நகர்த்துங்கள். இப்போது விண்டோவின் கரையோரமாக மோதும் அலைகளைக் கவனித்துப் பாருங்கள், புரிந்துவிடும். அதிர்வெண் கூடுவதும் குறைவதும். அல்லது 'சோர்ஸ் மோஷன்' என்பதைத் தேர்வு செய்தும் இதைச் செய்யலாம்.நீங்களே செய்து பார்க்க இங்கே கிளிக்குங்கள்.

மேலும் அதிகப்படியான சில செய்முறை அனிமேஷன்கள் கீழே உள்ள பக்கத்தில்.
0 மறுமொழிகள்

3 மே, 2009

தொலைநோக்கியில் வானம் - வேளச்சேரி த.நா.வீட்டு வசதி வாரிய குடியிருப்பில்கடந்த சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து இரவு 9 மணிவரை வேளச்சேரி - த.நா.வீ.வ.வா. குடியிருப்பில் தொலைநோக்கி மூலம் வானம், நட்சத்திரக் கூட்டங்கள், கோள்கள் பொதுமக்களுக்குக் காட்டப்பட்டன.

'ஐன்ஸ்டின் சயின்ஸ் மூவ்மென்ட் மற்றும் அமெச்சூர் அஸ்ட்ரானமி குரூப், வேளச்சேரி' தாமாக முன்வந்து, பொதுமக்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கினார்கள்.

'உலக வானியல் ஆண்டில்' இது போன்ற நிகழ்வுகள் - மிகவும் வரவேற்கப்படவேண்டியவை.

பொதுமக்கள் 100-க்கு மேற்பட்டோர் வந்து பார்வையிட்டு சென்றார்கள்.
0 மறுமொழிகள்

1 மே, 2009

நீங்கள் கலைக்கதிர் படிக்கிறீர்களா?தமிழில் அறிவியல் புத்தகங்கள் வருவது மிகவும் குறைவு என்று நினைக்கிறேன்.

அறிவியல் புத்தகங்களில், 'கலைக்கதிர்' என்ற புத்தகம் நான் தொடர்ந்து படித்து வருவது. கல்லூரியில் அறிமுகமாகி, என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. விண்வெளி பற்றி இதில் வெளியான பல கட்டுரைகள் என்னை 'இயற்பியல்' ரசிகனாக்கிவிட்டன.

மருத்துவக் கண்டுபிடிப்புகள்
விண்வெளி
நோபல் பரிசு
வேதியியல்
விலங்குகள்
மனித உடல்

என்று பலவிதமான தலைப்புகளில் கட்டுரைகள் இன்றும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. பள்ளியில் பயில்பவர்களுக்கு பரிசளிக்க மிகவும் சரியான அறிவியல் புத்தகம் இது.

கலைக்கதிர் 2004:
கலைக்கதிர் 2008:
கலைக்கதிர் ஏப்ரல் 2009:
கடந்த ஆண்டிலிருந்து சற்றே பெரிய அளவில் 10 ரூபாய் விலையில் வெளிவந்துகொண்டிருக்கிறது.

வருடச் சந்தா 120ரூபாய் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி புத்தகத்தை வீட்டிற்கு வரவழைக்கலாம்.

தொகையை காசாணை (Money Order) அல்லது வரைவாணை (DD) மூலமோ ''ஆசிரியர், கலைக்கதிர், கலைக்கதிர் கட்டிடம், 963 அவினாசி சாலை, கோவை - 37'' என்ற முகவரிக்கு அனுப்புக. காசாணையின் அடிக்கட்டையில் புதிய சந்தா என்றோ புதுப்பிக்கும் சந்தா(சந்தா எண்) என்றோ, குறித்து இதழ் அனுப்ப வேண்டிய முகவரி (பின்கோடு எண் மற்றும் மாவட்டம் உட்பட) அனுப்பியுள்ள தொகை மற்றும் எந்த மாதம் முதல் இதழ் வேண்டும், என்ற விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.
5 மறுமொழிகள்

பிரபஞ்ச மோதல்பிரபஞ்ச மோதல் என்பது இரண்டு அண்டங்களுக்கு இடையே நிகழும் ஒரு மோதல்.

பலநூறு ஒலியாண்டுகள் அகலமுள்ள அண்டங்கள் மோத ஆரம்பித்து முடிவுற பல நூறு ஆண்டுகளாகும்.

கீழே உள்ள படம் இத்தகைய மோதலின் ஒரு நிலை.இங்கே இதைப்பற்றிய தகவல்களைப் படிக்கலாம்.
1 மறுமொழிகள்
 

(C)ஊர்சுற்றி Content Rights reserved. Do not republish without the Author's permission.
Theme Revolution Two Church theme Source Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com Gorgeous Beaches of Goa