சாதாரணமாக நாம் துகள் என்று சொல்லிவிடுகிறோம். தூசு மூக்கில் நுழைந்து தும்மல் வரக் காரணமாகிறது. ஹீரோ சண்டையிடும்போது தூசு பறக்கிறது. அதெல்லாம் சரி, இந்த எதிர்த் துகள்னா(anti particle) என்ன? இது எங்கேயிருந்து வந்ததுன்னு ரொம்பவே குழம்பி போயி கிடந்தேன். '+' இருந்தா '-' இருக்கணும்தானே. அதேமாதிரி 'எலக்ட்ரான்' க்கு எதிர்த் துகள்னா 'பாசிட்ரான்' இருக்கு.
இந்த 'ஏஞ்சல்ஸ் அண்டு டெமான்ஸ்' படம் பார்த்தீங்கன்னா, நம்ம 'தசாவதாரம்' ஸ்டைல்ல ஒரு குப்பிய துரத்திகிட்டே போறாங்க. அந்த குப்பிக்குள்ள 'ஆன்டி மேட்டர்' (ச்ச...அந்த ஆன்டி இல்லப்பூ, இது Anti) இருக்குதாம் அது வெளிய வந்தா பெருத்த சேதம் நடக்குமாம். அறிவியல் பூர்வமா இது உண்மைதான்.
எதிர்த்துகளான 'ஆன்டி மேட்டரும்' சாதாரண துகள்களும் இணையும்போது அதிக அளவில் ஆற்றல் வெளிப்படுகின்றன. அதெல்லாம் சரி இந்த ஆன்டி மேட்டர்/எதிர்த் துகள் எங்கேயிருந்து வருதுன்னா, சாதாரணமா வராது. அதை பயங்கரமான எந்திரங்களை வைத்துதான் உருவாக்க வேண்டும். இதைத்தான் 'CERN' எனப்படும் ஐரோப்பிய கூட்டமைப்பு செய்து கொண்டிருக்கிறது.
போட்டான்களை அதிக அளவுக்கு முடுக்கி, மோதவிடும்போது அவற்றுக்கு கொடுக்கப்பட்ட ஆற்றல் நிறையாக மாற்றப்படுகிறது(ஐன்ஸ்டினின் E=Mc2).
இந்த மோதலில் எல்லா நேரத்திலும் எதிர்த் துகள் வெளிப்படுவதில்லை. அபூர்வமாக எப்போதாவது கிடைக்கின்றன. அப்படியே கிடைத்தாலும் இவற்றை, சும்மா பட்டம் பறக்கவிடும் நூலைப் பிடிப்பது போல் பிடித்துவிடமுடியாது.
நிறைய ஆற்றலைச் செலவழித்து அதற்கென்று பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட குடுவைகளில் (அலாடின் பூதம் போல) அடைத்து வைக்கப்படுகின்றன. குடுவை வெற்றிடதால் ஆனது. சிறப்பான மின்காந்த முறைகளைக் கொண்டு 'எதிர்த்துகள்கள்' இதனுள் அடைத்து வைக்கப்படுகின்றன.
தப்பித்தவறி இவை வெளியே வந்துவிட்டால் மற்ற துகள்களோடு வினைபுரிந்து (Annihilation) ஆற்றலை வெளிவிடுகின்றன. இதுதான் படத்தில் காட்டப்பட்டது. ஆனால் இது நடக்க வேண்டுமென்றால் 1 கிராம் அளவாவது எதிர்த்துகள் தேவை. ஆனால் இந்த அளவுக்கு எதிர்த்துகள் இதுவரை சேகரிக்கப்படவில்லை. மேலும் இதைத் தயாரித்து சேமித்து வைக்க மிக மிக அதிக அளவில் ஆற்றல் (செலவும் அதிகம்தான்) தேவைப்படுகிறது.
எதிர்த்துகள் பற்றி மேலும் அதிகப்படியான தகவல்கள் CERN இணைய தளத்தின் இந்த முகவரியில் உள்ளன.
Comments
1 comments to "ஆன்டி மேட்டரும்(!!!) ஏஞ்சல்ஸ் அண்டு டெமான்ஸும் அறிவியலும்"
24 ஜூலை, 2009 அன்று 7:18 PM
தமிலிஷில் பிரபலமாக்கியவர்களுக்கு நன்றி நன்றி.
கருத்துரையிடுக