25 நவ., 2009

அடிப்படைத் துகள்கள் ஓர் அறிமுகம் - இழை தியரி ஓர் தொடக்கம்பொதுவாக நம் உலகம் பொருட்களால் நிறைந்திருக்கிறது. அவை நம் கண்ணுக்குத் தெரிகின்றன. நீங்கள் பயன்படுத்தும் கணிணி, நீங்கள் சைட் அடிக்கும் பெண் அணிந்திருக்கும் கண்ணாடி, உங்கள் காதலனின் பைக் என்று எல்லாமே பொருட்களால் நிறைந்துள்ளன. இந்த பொருட்களெல்லாம் அணுக்களால் ஆனவை. அணுக்கள்....

இத்தோட நான் நிறுத்திக்குவேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும். ஆனா 'இழை தியரி' (String Theory) பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பித்த பின்பு, இதையும் தாண்டி யோசிக்க வேண்டியதாயிற்று.

அணுக்களின் மையத்தில் அணுக்கரு உள்ளது, அதைச் சுற்றி எலக்ட்ரான்கள் வட்டமிடுகின்றன. அணுக்கருவில் புரோட்டான்களும் நியூட்ரான்களும் உள்ளன.
இவை 'குவார்க்' என்னும் நுண்ணிய துகள்களால் ஆனது. அந்த குவார்க்.... டேய் போதும்டா சாமி. ஒகே. ஒகே.

1. அணு:
இது பொருட்களின் பேஸ்மென்ட். அணு எண் ஒன்றில் இருந்து 108 வரை கொண்ட விதவிதமான தனிமங்கள் இங்கே உள்ளன(118 வரை கண்டுபிடிச்சிட்டாங்களாமே! கடைசி தனிமம் 2002 ல் கண்டுபிடித்தார்களாம் விபரம் இங்கே http://www.webelements.com/). அதாவது அணுவின் தடிமனைக் குறிக்கும் எண்கள் எனவும் கொள்ளலாம். இதில் ரொம்ப சின்னதான ஹைட்ரஜன் அணுவை எடுத்துக்கொள்வோம்.


2. எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான்:
இப்போ மேல இருக்கிற ஹைட்ரஜன் படத்தில சிவப்பாக இருப்பது மையக்கரு. இந்த மையக்கருவில் ஒற்றை புரோட்டான் மட்டும் இருக்கிறது. சுற்றிவரும் அந்த நீலநிற புள்ளி எலக்ட்ரான். ஹைட்ரஜனில் நியூட்ராம் இல்லை, மற்ற அணுக்களுக்கு நியூட்ராம் இருக்குமிடம் மையக்கரு.

3. குவார்க்?:
சரி எலக்ட்ரான், புரோட்டான் பார்த்தாச்சு, குவார்க் எங்கே? இதோ....


நீங்க மேல பார்க்குறது விதவிதமான குவார்க்குகள். இது எல்லாம் நியூட்ரானுக்கு உள்ளேயும், புரோட்டானுக்கு உள்ளேயும் எலக்ட்ரானுக்கு உள்ளேயும் இருக்குங்கறாங்க.

4.குவார்க் ஓகே - அதுக்கு அப்புறம்?:
இங்கேதான் ஆரம்பிக்கிறது துகள் அறிவியலின் அடுத்த கட்டம். மேலேயிருக்கிற விளக்கங்கள் - குவான்டம் தியரிக்கு அச்சு அசலாக ஒத்துப்போகின்றன. ஆனால், ஐன்ஸ்டினின் ஈர்ப்பு விதிகளுக்கு.... ம்ஹூம்... நோ வே. ஒண்ணுத்துக்கும் உதவாது. ஐன்ஸ்டினின் ஈர்ப்பு விதகள் இந்த துகள்களை அடிப்படையாகக் கொண்டவை இல்லை.

அதனால என்ன பிரச்சனை இருந்துட்டு போகட்டுமே?! அதுதான் இல்லை.

''இப்படி ஒரு தியரிக்கு ஒத்துப்போயும் இன்னொரு தியரிக்கு ஒத்துப்போகாததும் ஒரே மருந்து வேற வேற எஃபக்ட்ட குடுக்கிற மாதிரி'' அப்படிங்கிறாங்க சில விஞ்ஞானிகள். அதனால எல்லாத் தியரிக்கும் ஒத்துப்போகிற மாதிரி சிலபல ஐடியாக்களை அவர்கள் முன்வைத்தார்கள். அதுதான் 'String Theory' - இழை தியரி.

5. இழை?:
குவார்க்-னு படிச்சோம் இல்லையா? அந்த குவார்க்கே இந்த இழைகளால் ஆனது அப்படிங்கறாங்க சிலர். அதாவது இந்த குவார்க்குகள் இழைகளால் ஆனவை, அந்த இழைகளின் தன்மைகள் வெவ்வேறாக இருப்பதால் நாம் வேறு வேறு பொருட்களை உணர்கிறோம் என்றும் கூறுகிறார்கள்.

இதுதான் துகள் அறிவியலின் அடுத்த படி. இதையும் ஒரு பகுதியாக 'CERN' -ன் LHC ல் ஆராய்கிறார்கள்.

தொடரும்...
10 மறுமொழிகள்

Comments

10 comments to "அடிப்படைத் துகள்கள் ஓர் அறிமுகம் - இழை தியரி ஓர் தொடக்கம்"

..:: Mãstän ::.. சொன்னது…
25 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:47

நல்லா சொல்லீருக்கீங்க... அதிககதிகமா எழுதவும்.

<<<
இங்கேதான் ஆரம்பிக்கிறது துகள் அறிவியலின் அடுத்த கட்டம். மேலேயிருக்கிற விளக்கங்கள் - குவான்டம் தியரிக்கு அச்சு அசலாக ஒத்துப்போகின்றன. ஆனால், ஐன்ஸ்டினின் ஈர்ப்பு விதிகளுக்கு.... ம்ஹூம்... நோ வே. ஒண்ணுத்துக்கும் உதவாது. ஐன்ஸ்டினின் ஈர்ப்பு விதகள் இந்த துகள்களை அடிப்படையாகக் கொண்டவை இல்லை.
>>>

இது புரியவே இல்லை :(

உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) சொன்னது…
25 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:42

உபயோகமான தகவல்கள்
மிக அருமையான பதிவு
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

ஊர்சுற்றி சொன்னது…
25 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:01

..:: Mãstän ::..
அதாவது குவான்டம் தியரி துகள்களை அடிப்படையாகக் கொண்டது. ஐன்ஸ்டினின் ஈர்ப்புவிதிகள், வெற்றிடம்(Space) பருப்பொருட்களால் வளைக்கப்படுதலை அடிப்படையாகக் கொண்டது.
முடிந்தால் அதைப்பற்றியும் எழுதுகிறேன்.

ulavu.com நன்றி.

ஊர்சுற்றி சொன்னது…
26 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:03

தமிழிஷில் குத்தினவங்களுக்கும் நன்றி.

அனைவருக்கும் அறிவியல் சொன்னது…
4 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 4:17

நல்லா இருக்குங்க.. ஆனா கொஞ்சம் வேகமா போனமாதிரி இருக்கு.

ஊர்சுற்றி சொன்னது…
4 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:22

கருத்திற்கு நன்றி 'அனைவருக்கும் அறிவியல்'.

வரும் இடுகைகளில் சரிசெய்ய முயற்சிக்கிறேன்.

Bogy.in சொன்னது…
7 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 5:12

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in சொன்னது…
14 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 7:33

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

தமிழ்த்தோட்டம் சொன்னது…
17 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 7:32

பயனுள்ள நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி

Ramesh Ramar சொன்னது…
31 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 12:46

Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.Tamil News

கருத்துரையிடுக

 

(C)ஊர்சுற்றி Content Rights reserved. Do not republish without the Author's permission.
Theme Revolution Two Church theme Source Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com Gorgeous Beaches of Goa