25 செப்., 2009

'நிலவில் தண்ணீர்' கண்டுபிடித்தது சந்திராயனா?! மேலும், அமெரிக்கர்கள் நாணயமானவர்கள்!



சந்திராயன்-1 ல் பயணித்த அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான 'நாசா'வின் Moon Mineralogy Mapper எனப்படும் கருவி, நிலவைப் பற்றி முன்னெப்போதும் இல்லாத வகையில் தகவல்களை சேகரித்துள்ளது.

முந்தைய இடுகையில் கூறியது போல, இந்த M3 ஆனது நிலவிலிருந்து வரும் அகச்சிவப்பு கதிர்வீச்சினை வைத்து நிலவைப் படம் பிடித்தது. ஒரு பொருளின் புறப்பறப்பிலிருந்து பெறப்படும் அகச்சிவப்பு கதிர்வீச்சு அந்தப் பொருளில் (ஒட்டிக்கொண்டு) இருக்கும் வெவ்வேறு பொருட்களைப் பொருத்து மாறுபடும். அதாவது இரும்புத்துகள்கள் இருக்கும்போது கிடைக்கும் கதிர்வீச்சும், தண்ணீர் மூலக்கூறுகள் இருக்கும்போது கிடைக்கும் கதிர்வீச்சும் வித்தியாசப்படும். இதை வைத்து ஆராயும்போது M3 கண்டுபிடித்தது பின்வருமாறு, "நிலவிலிருந்து பெறப்பட்ட கதிர்வீச்சில் சில அலைநீளங்களைக் காணோம். இந்த அலைநீளங்கள் 'தண்ணீர்' மற்றும் 'ஹைட்ராக்ஸில்' மூலக்கூறுகளால் உறிஞ்சிக்கொள்ளப்படுபவை".

எனவே நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்யலாம்.

தண்ணீர் மூலக்கூறு - H2O
ஹைட்ராக்ஸில் மூலக்கூறு - HO (ஒரு ஹைட்ரஜன் + ஒரு ஆக்ஸிஜன்).

M3 மூலம் பெறப்பட்ட தகவல்களில் உருவான படங்களில் ஒருசில...






"அமெரிக்கர்கள் நாணயமானவர்கள்" - பின்னே, அவர்களது ஒவ்வொரு படங்களிலும் Chandrayan -1 யும் சேர்த்தே குறிப்பிடுகிறார்கள். நாம்தான், 70 - 80 சதவீதம் இன்னொருவர் தொழில்நுட்பத்தை வைத்தே எதையும் செய்தாலும் 'நான்தான் செஞ்சேன், நான்தான் செஞ்சேன்' னு அலப்பறை குடுக்கிறது. உதாரணம் சமீபத்தில் 'நாங்களே செஞ்சது'ன்னு சொன்ன 'அரிகன்ட்' (Arihant) நீர்மூழ்கிக் கப்பல்.

சில ஊடகங்கள் சந்திராயன் - 1 தான் நிலவில் தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்ததாக தெரியாமல் உளரிக்கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். சந்திராயன் - 1 ல் இருந்த அமெரிக்க கருவிதான் மேற்கண்ட ஆராய்ச்சிகளைச் செய்தது என்பதை மறவாதீர்கள்.

0 மறுமொழிகள்

Comments

0 comments to "'நிலவில் தண்ணீர்' கண்டுபிடித்தது சந்திராயனா?! மேலும், அமெரிக்கர்கள் நாணயமானவர்கள்!"

கருத்துரையிடுக

 

(C)ஊர்சுற்றி Content Rights reserved. Do not republish without the Author's permission.
Theme Revolution Two Church theme Source Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com Gorgeous Beaches of Goa