இழை கோட்பாடு(STRING THEORY):
இன்றைய இயற்பியல் உலகில் அதி அவசரமாக தீர்வுகாணவேண்டி, எல்லா வல்லுனர்களாலும் அலசி ஆராயப் பட்டுக்கொண்டிருக்கும் ஒரு கோட்பாடு (Theory).
"இது என்ன 'பட்டு இழை' யா? அல்லது 'நைலான் இழையா'?" என்று கேட்போருக்கு ஒரு சிறு முன் விளக்கம்.
இயற்கையில் நான்கு விதமான அடிப்படை விசைகள் உண்டு.
1. கோள்களுக்கு இடையேயான/கோள்களில் உள்ள பொருட்கள் மீதான ஈர்ப்பு விசை (Gravity)
2. அணுக்கள் அதன் தன்னிலை பிறழ்ந்து சிதைவதற்கான விசை (Weak).
3. அணுவிற்குள்ளும் அணுக்களுக்கு இடையிலும் பிணைப்புகளை ஏற்படுத்தும் விசை (Electromagnetic).
4. அணுவின் மையக் கருவில் உள்ள துகள்களை பிணைத்துள்ள விசை (Strong).
இயற்பியலின் பிரச்சினையே இந்த நான்கு விசைகளையும் ஒட்டுமொத்தமாக விளக்கும் எந்த தியரியும் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை என்பதுதான். இந்த நான்கையும் 4 in 1 ஆக மாற்ற அறிவியலாளர்கள் ஐன்ஸ்டின் முதற்கொண்டு பலரும் முயற்சி செய்தார்கள்/செய்து கொண்டும் இருக்கிறார்கள்.
இந்த இயற்கையை ஓன்றிணைக்கும் முயற்சியில் கற்பனையில் கட்டப்பட்டதுதான் மேற்கூறிய 'இழை'. அணுவில் மையக் கரு இருப்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அந்த மையக்கருவில் புரோட்டானும் நியூட்ரானும் இருக்கும். இந்த துகள்களுக்கு அடிப்படை 'குவார்க்' என்று இன்றைய நிலையில் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இந்த 'குவார்க்' குக்கும் அடிப்படையாக 'String' எனப்படும் இழைகள் உள்ளதாக கூறுவதே இழை கோட்பாடு. இப்படி கூறுவதன் மூலம் எல்லா விசைகளுக்கும் ஒரே 'தியரி' பொருந்தும் என நம்புகிறார்கள்.
இந்த இழை கோட்பாட்டை தமிழில் 'இழை நியதி' என்ற பெயரில் சில இடங்களில் பார்க்க முடிகிறது. நியதி என்பது இறுதி வடிவம் பெற்றவற்றை குறிப்பிடப் பயன்படும் வார்த்தை. ஆனால் நம்முடைய இழை தியரி ஒரு கொள்கை வடிவத்திலேயே இன்னும் இருப்பதால் 'கோட்பாடு' (புவி மையக் கோட்பாடு, சூரிய மையக் கோட்பாடு போல) என்றே நாம் இதை விளிக்கலாம். இழை கோட்பாடு பற்றிய மேலதிகத் தகவல்கள் இனிவரும் இடுகைகளில்...

Comments
0 comments to "'இழை' கோட்பாடு - நமீதாவின் ஆடையில்லாமல்!"
கருத்துரையிடுக