
ஒரு வருடத்திற்கு முன்பு பலருக்குப் பீதியை கிளப்பிய அதே 'LHC' என்ற இயந்திரம் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பெருவெடிப்பின் இரகசியங்களை அறிந்துகொள்ளவும், இன்னும் இயற்பியல் - அடிப்படைத் துகள்கள் இவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் இந்த பிரம்மாண்டமான இயந்திரம் பயன்படப்போகிறது.
என்ன செய்யப் போகிறார்கள்:
27-கி.மீ. சுற்றளவில் கட்டப்பட்டுள்ள இரு பைப்புகள் ஒழுங்கமைக்கப்பட்ட மின்காந்தப் புலத்தில் இருக்கின்றன. இவை வழியாக அடிப்படைத் துகள்கள் (உ.ம். புரோட்டான்) எதிரெதிர்த் திசைகளில் சுற்றவைக்கப்படுகின்றன. அப்படி சுற்றும்போதே, அதிவேகத்திற்கு முடுக்கப்படுகின்றன (LHC யை 'துகள் முடுக்கி' என்றும் அழைக்கலாம்). இதன் பின்பு குறிப்பிட்ட ஆய்வுக் கருவிகள் இருக்கும் இடங்களில், சுற்றிக்கொண்டிருக்கும் துகள்கள் துல்லியமாக நேருக்குநேர் மோத வைக்கப்படுகின்றன.
இந்த மோதலுக்குப் பிறகு நேனோ, மைக்ரோ, மில்லி செகண்டுகளில் நடப்பவை அலசி ஆராயப்படுகின்றன.
எப்போது:
இன்னும் ஒரு வாரத்தில் குறைந்த அளவு ஆற்றலை வைத்து துகள்களை முடுக்கி மோதவிடப் போகிறார்கள். அதைத் தொடர்ந்து படிப்படியாக முடுக்கியின் ஆற்றலை அதிகரித்து (7TeV) மோதவிடுவார்கள். அதிக ஆற்றல் கொண்ட மோதலில்தான் மிக முக்கியமான தகவல்கள் கிடைக்கும்.
கவனிக்க:
கடந்த வருடம் இதே இயந்திரம் பயன்படத் துவங்கியபோது, பெரும்பாலான ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இருந்தது. அப்போது ஏற்பட்ட கோளாறுகள் (ஒருவருட காலமாக) சரிசெய்யப்பட்டு LHC மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் மீண்டு வந்துள்ளது. இந்த துகள் முடுக்கி மீண்டும் தலைப்புச் செய்தியாகுமா?
Comments
1 comments to "மீண்டும் LHC - தலைப்புச் செய்தியாகுமா"
24 நவம்பர், 2009 அன்று 8:40 AM
தமிழிஷில் குத்தினவங்களுக்கு நன்றி.
கருத்துரையிடுக